×

அமெட் பல்கலைக் கழகத்தில் வஉசி பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழா சென்னை அமெட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் நாசே ஜே.ராமச்சந்திரன் பேசியதாவது: ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் தன் சொத்தையெல்லாம் விற்று சுதேசி எனும் கப்பலை வாங்கி இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியவர் வீரத்தமிழன் வ.உ. சிதம்பரனார். இதனால், ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்து சிறையில் செக்கிழுக்க வைத்தனர். அவரை சிறையில் அடைக்கும்போது வழிநெடுகிலும் அவருக்காக பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்த பொதுமக்கள், அவர் தண்டனை காலம் முடிந்து வரும்போது அவரை வரவேற்க 4 பேர் மட்டுமே இருந்தனர். இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் கடைசி காலத்தில் வறுமை நிலையில் இருக்கும் போது, இவரது நண்பர் இவருக்கு எழுதிய கடிதத்தில் எனக்கு ஒரு ரூபாய் வட்டிக்கு கடன் கொடுக்க முடியுமா என்று கேட்டபோது, நானே 1 ரூபாய்,  2  ரூபாய்க்கு அரிசி வாங்கி குடும்பம் நடத்தி வருகிறேன் என்று கூறியது, எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. பலபேர் இவரை மறந்து இருக்கலாம். ஆனால் அமெட் பல்கலைக்கழகம் வ.உ.சிதம்பரனாரை நினைவுகூர்ந்து பாராட்டுகிறது.இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் ‘‘பெரியவர் வ.உ.சிதம்பரனார் சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம்” என்ற நூலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் நாசே.ஜே. ராமச்சந்திரன் வெளியிட, துணைவேந்தர் கர்னல் டாக்டர் ஜி.திருவாசகம், முதல்வர் பூபதி பாஸ்கரன், துணை முதல்வர் கேப்டன் கார்த்திக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் இணைவேந்தர் டாக்டர் ராஜேஷ் ராமச்சந்திரன், இணை துணைவேந்தர் டாக்டர் என்.மனோகரன், பதிவாளர் டாக்டர் எம்.ஜெயபிரகாஷ்வேல், இணைப பதிவாளர் சங்கீதா ஆல்பின் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

The post அமெட் பல்கலைக் கழகத்தில் வஉசி பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vauzi ,Amed University ,Chennai ,V.U. Chidambaranar ,AMET University ,University ,Chancellor ,Dr. ,Nase ,Vausi ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...